அ.தி.மு.க. மாணவரணி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பாஸ்கரன் ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய போது எடுத்த படம்.
x
சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பாஸ்கரன் ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய போது எடுத்த படம்.
தினத்தந்தி 12 Dec 2020 10:29 PM GMT (Updated: 12 Dec 2020 10:29 PM GMT)

சிவகங்கையில் அ.தி.மு.க. மாணவரணி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மாற்றுக்கட்சியை சேர்ந்த, கட்சி சாராத இளைஞர்களை இணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகங்கையில் நடைபெற்றது. விழாவுக்கு மாணவரணி மாநில துணை செயலாளர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.எம்.ராஜா வரவேற்று பேசினார்.

விழாவில் கண்டபட்டி காளிமுத்து அம்பலம், புதுக்கண்டனூர் குமார், சிவகங்கை நாகராஜ், பட்டமங்கலம் சுமன், தேவகோட்டை ராஜ்குமார், திருமணவயல் சுப்பிரமணியன் உள்பட ஏராளமானவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி பேசினார்.

தையல் எந்திரம்
விழாவில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும் போது,

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதில் மாணவரணியின் பங்கு மிக பெரியது. இதேபோல் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் உழைக்க வேண்டும். முதல்-அமைச்சர் கூறியதை போல் இது இக்கட்டான சூழ்நிலை என்றும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் நம்மை யாராலும் அசைக்க முடியாது. அதற்கு மாணவரணியான உங்களின் கடின உழைப்பு தேவை என்றார்.

ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் 26 பேருக்கு கல்வி கட்டணமும், 50 பெண்களுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன், கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவரணி நிர்வாகி அய்யப்பன் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

Next Story