ஊத்துக்கோட்டையில், அறுவடைக்கு தயாரான ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கண்ணீர்
ஊத்துக்கோட்டையில் அறுவடைக்கு தயாரான ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கின. இதனால் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட கொய்யாத்தோப்பு, மேல் சிற்றம்பாக்கம், கீழ்ப்பாக்கம் மற்றும் போந்தவாக்கம் பகுதிகளில் விவசாயிகள் பாபட்லா நெற்பயிரை ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டிருந்தனர். அவர்கள் கூட்டுறவு சங்க வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து இருந்தனர். இந்தநிலையில் நிவர், புரெவி புயல்களால் பெய்த மழையால் ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சுமார் 4 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் முளையிட்டு உள்ளது. இதனால் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சேத மதிப்பை கணக்கிட்டு இழப்பீடுத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story