மதுரை விமான நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
மதுரை விமான நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மத்திய தொழில்பாதுகாப்பு படை துணை கமாண்டோ சைனி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் விமான நிலைய தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து மதுரை விமான நிலைய வளாகத்தில் விமான கடத்தல், விபத்து மற்றும் அவசர காலத்தில் செயல்படும் விதம் மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை ஆகியவை நடைபெற்றது.
விமான விபத்து ஏற்படும்போது அதில் இருந்து பயணிகளை எவ்வாறு பாதுகாப்பது, அவர்களை அங்கிருந்து மீட்டு எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, விமானம் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்த ஒத்திகை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் முன்னிலை யில் செய்துகாண்பிக்கப் பட்டது.
இதில் விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கட்டளையிடும் வாகனம்
இதற்கிடையே, மதுரை விமான நிலையத்திற்கு புதிதாக கொண்டு வரப்பட்ட கட்டளையிடும் வாகனத்தின் மூலம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று ஒத்திகை நிகழ்ச்சிகளின் போது அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒத்திகை நிகழ்ச்சியை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்த ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. அனுப்பானடி, மதுரை தீயணைப்பு வீரர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story