குடவாசல் பஸ் நிலையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் சாலைமறியல் 60 பேர் கைது


குடவாசல் பஸ் நிலையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் சாலைமறியல் 60 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2020 6:45 AM IST (Updated: 13 Dec 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் பஸ்நிலையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடவாசல், 

குடவாசல் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு வெள்ளாளர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். முக்குலத்தோர் புலிகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சீவலப்பேரி சரவணன், குடவாசல் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு வ.உ.சி. நலப் பேரவை அமைப்பாளர் கணேசன், குடவாசல் நகர இளைஞரணி செயலாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோ‌‌ஷமிட்டனர்.

இதில் மாநில இளைஞர் அணி தலைவர் ராஜா பேசுகையில், வெள்ளாளர் மக்களின் உரிமையை நிலைநாட்ட அரசு துணை நிற்க வேண்டும். இல்லையென்றால் இந்த மறியல் போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றார்.

60 பேர் கைது

அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட 60 பேரை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் குடவாசல் போலீசார் கைது செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story