கண்டாச்சிபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


கண்டாச்சிபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 Dec 2020 11:24 AM IST (Updated: 13 Dec 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் பொன்முடி எம்.எல்.ஏ.பார்வையிட்டார்.

திருக்கோவிலூர், 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முகையூர், ஆயந்தூர், சென்னகுணம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை பொன்முடி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது அவர் அங்கிருந்தவர்களிடம், 18 வயது நிரம்பியவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது முகையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், லூயிஸ் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story