திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது.
திருப்பத்தூர்,
நகராட்சிகள், சப்-கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் விரிவாக்க மையங்கள், கிராமங்கள், அரசு பள்ளிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது. அனைத்துப் பொது இடங்களிலும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? எனச் சரிபார்க்கலாம். பெயர் இல்லாவிட்டால் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்குவதற்கு படிவம் 7, திருத்துவதற்கு படிவம் 8, சட்டமன்ற தொகுதிகளுக்கு முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகிய படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அதன்படி நேற்று நடந்த சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க 4 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூரில் 1,251, ஜோலார்பேட்டை 1,375, வாணியம்பாடி 1,169, ஆம்பூர் 1,077 பேர் என மொத்தம் 4,872 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். திருத்தம் செய்ய, சட்டமன்ற தொகுதிக்கு மாற்றம் செய்ய முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய 6,754 பேர் விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அனைத்து இடங்களிலும் வாக்காளர்கள் தங்களின் பெயர்களை சேர்க்க, நீக்க, மாற்றம் செய்ய கோரி மனு கொடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story