சேலம் அய்யப்பன் கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமி தரிசனம்


சேலம் அய்யப்பன் கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Dec 2020 10:05 PM IST (Updated: 13 Dec 2020 10:05 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அய்யப்பன் கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமி தரிசனம் செய்தார்.

சேலம்,

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி. இவர், பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கிரி யோஜனா பிரகார் பிரசாத் அபியான் (பிரதம மந்திரி மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம்) என்ற தன்னார்வ அமைப்பின் அகில இந்திய தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று அவர் சேலம் வந்தார். பின்னர் சேலம் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த திட்டங்கள் மூலம் அனைவரும் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தமிழகம் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.

அப்போது மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், பொதுச் செயலாளர்கள் சசிகுமார், செல்வராஜ், மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து பிரகலாத் தாமோதரதாஸ் மோடி மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story