சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 66 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 66 பேர் பாதிக்கப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22 பேர், எடப்பாடி பகுதியில் 4 பேர், மகுடஞ்சாவடியில் 7 பேர், ஓமலூரில் 6 பேர், நங்கவள்ளியில் 3 பேர், தாரமங்கலத்தில் 7 பேர், வீரபாண்டியில் 2 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், வாழப்பாடியில் 3 பேர் மற்றும் கொளத்தூர், கொங்கணாபுரம், மேச்சேரி, சேலம் ஒன்றியம், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மேட்டூர் நகராட்சி பகுதியில் 3 பேரும், ஆத்தூர் நகராட்சியில் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.
533 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 57 பேர் பூரணமாக குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 533 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story