வாக்குக்காக மோடி தமிழ்நாட்டை குறி வைக்கிறார் - சீமான் பேட்டி
தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் ஸ்ரீதரன் நினைவு நாளையொட்டி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தம்பி திரை களத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பூந்தமல்லி,
சமூக எழுச்சி போராட்டங்கள் வரும்போதெல்லாம் தேச விரோதிகள் என்று கூறுகின்றனர். மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காத அரசை எப்படி அரசு என்று சொல்ல முடியும்?. நான் டெல்லிக்கு சென்றாலும் மாவோயிஸ்டு என்று தான் சொல்வார்கள். ரூ.3 ஆயிரம் கோடிக்கு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைப்பவர்களுக்கு வெண்டிலேட்டர் வாங்க முடியவில்லை.
பிரதமர் மோடி வாக்குக்காக தமிழ்நாட்டை குறி வைக்கிறார். அதற்காக தமிழில் பேசி வருகிறார். எங்களுக்கு தேசிய எதிரி பா.ஜ.க., காங்கிரஸ் இனத்தின் எதிரி, பா.ஜ.க. மானுடகுலத்துக்கு எதிரி. அடுத்து திராவிட கட்சிகள். தற்போது புதிதாக ஒருவர் வருகிறார். அவர் எங்களை அவமதிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story