டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராசா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் இளவேனில் கலந்துகொண்டு பேசினார். இதில் தமிழ் புலிகள் கட்சியினர், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலந்துகொண்டனர்.
கூடலூர்
கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தி.மு.க. கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்பட கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார்.
கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கோபி, குணசேகரன், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனிபா, ராஜா, அமீர் விடுதலை சிறுத்தைகள் இளைஞர் பாசறை மாவட்ட அமைப்பாளர் புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story