33 வார்டுகளை கொண்ட புதுச்சேரி நகராட்சி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
33 வார்டுகளை கொண்ட புதுச்சேரி நகராட்சியின் வரைவு வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை நகராட்சி ஆணையரும், வாக்காளர் பதிவு அதிகாரியுமான சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்து அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளையும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட 33 வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
வருகிற 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை புதுவை நகராட்சி ஆணையர் அலுவலகம் மற்றும் 8 இடங்களில் வைக்கப்பட உள்ளது. www.pdy-mun.in என்ற இணையதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:-
முத்தியால்பேட்டை (மேற்கு), முத்தியால்பேட்டை (கிழக்கு), சோலைநகர் வார்டுகளுக்கான பட்டியல் பாரதிதாசன் திருமண நிலையத்தில் உள்ள வீட்டுவரி வசூல் மையம். வ.உ.சி. நகர், திருவள்ளுவர் நகர் வார்டுகளுக்கான பட்டியல் முத்தியால்பேட்டை, வாழைக்குளம் உதவிபொறியாளர் அலுவலகம், பெருமாள்கோவில், குருசுக்குப்பம், ராஜ்பவன், கதீட்ரல் வார்டுகளுக்கான பட்டியல் புதுச்சேரி விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள சுகாதார மற்றும் குடும்பநல இயக்குனர் அலுவலகம், புதுப்பாளையம், அண்ணாநகர், நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை வார்டுகளுக்கான பட்டியல் நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதியில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்க்கலாம்
இளங்கோ நகர், பிள்ளைத்தோட்டம், சக்திநகர் வார்டுகளுக்கான பட்டியல் புதுச்சேரி சாரம் (வருவாய்-வடக்கு) துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குபேர் நகர், வாணரப்பேட்டை, பெரியபள்ளி, வம்பாகீரப்பாளையம், கோலாஸ்நகர், நேத்தாஜி நகர் வார்டுகளுக்கான பட்டியல் கம்பன் கலையரங்க வரிவசூல் அலுவலகம், விடுதலை நகர், முதலியார்பேட்டை, பாரதிதாசன் நகர், உழந்தைகீரப் பாளையம் (கிழக்கு), உழந்தைகீரப்பாளையம் (மேற்கு) வார்டுகளுக்கான பட்டியல் முதலியார்பேட்டை நகராட்சியிலும், நைனார்மண்டபம், தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம் (கிழக்கு), முருங்கப்பாக்கம் (மேற்கு), கொம்பாக்கம் வார்டுகளுக்கான பட்டியல் மரப்பாலம் உதவிபொறியாளர் அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
1.1.2020 தேதியை தகுதி நாளாக கொண்ட 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை புதியதாக சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஆணையர் அலுவலகத்திலோ, அதற்கான அதிகாரிகளிடமோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆணையர் அலுவலகம் அல்லது www.pdy-mun.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வார்டுகளுக்கான வரைபடங்களும் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story