மதுரை அருகே யானை மலையில் உள்ள சிவலிங்கம் ஐகோர்ட்டு உத்தரவுபடி அகற்றம்
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி மதுரை அருகே ஒத்தக்கடை யானைமலையில் உள்ள சிவலிங்கம் அகற்றப்பட்டது.
சமணர் படுகை
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ் என்பவரும் மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக்கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் என்பவரும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், தமிழகத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் குறித்து பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பெயர் பலகை அமைக்க வேண்டும்.
மதுரை அருகே ஒத்தக்கடை யானைமலையில் சமணர் படுகைக்கு செல்லும் வழியில் சிமெண்டால் செய்யப்பட்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்கால நினைவு சின்னத்தின் அடையாளத்தை மாற்றும் வகையில் அங்கு எவ்வித மத அடையாளங்களையும் நிறுவக்கூடாது. இதனால் யானைமலையில் உள்ள சிமெண்ட் சிவலிங்கத்தை அகற்ற வேண்டும். தவறினால் மதுரை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்
அகற்றம்
இந்தநிலையில் நேற்று தொல்லியல் துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் யானைமலையில் வைக்கப்பட்டு இருந்த சிவலிங்கத்தை அகற்றி கீழே இறக்கினர். இதுதொடர்பான அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிவலிங்கம் அகற்றப்பட்டதையொட்டி அங்கு தொல்லியல் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானரவி, ஒத்தகடை இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிங்கராஜ், ஒத்தக்கடை தாசில்தார் லயனல் ராஜ்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story