மதுரை அச்சம்பத்து பகுதியில் கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
மதுரை அச்சம்பத்து பகுதியில் கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஸ்திவாரம்
மதுரை அச்சம்பத்து பகுதியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று கட்டுமான பணியாளர்கள் கட்டிடத்திற்கான குழிகளை தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் ஒரு இடத்தில் மண் கலயங்கள் தென்பட்டன. அதனை கண்ட அவர்கள் குழி தோண்டும் பணியை நிறுத்தி விட்டு மண் கலயங்களை குழியில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.அதில், அந்த குழிக்குள் காணப்பட்ட பெரிய மண்பானையில் மனித எலும்புகள் காணப்பட்டன.
இதனையடுத்து, குழி தோண்டும் பணியை நிறுத்தி விட்டு அந்த தொழிலாளிகள் அங்கு காணப்பட்ட எலும்புகளை சேகரித்து ஒரு சாக்கு மூட்டையில் சேகரித்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அகழாய்வு
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தற்போது பல்வேறு இடங்களில் தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக, உசிலம்பட்டி பகுதியில் காணப்பட்ட இரும்பு உலை, கின்னிமங்கலம் பகுதியில் கிடைத்த கல்வெட்டு போன்ற பழங்கால மக்கள் வாழ்வியலை காட்டும் ஆதாரங்களை குறிப்பிடலாம்.அந்த வகையில், தற்போது மதுரை நகரின் முக்கிய பகுதியான அச்சம்பத்து பகுதியில் கிடைத்துள்ள இந்த முதுமக்கள் தாழியை குறிப்பிடலாம்.ஏனவே, அரசு நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியில் தகுந்த அகழாய்வுகளை மேற்கொண்டு இவற்றின் தொன்மையை கண்டறிய வேண்டும்' என்றார்.
Related Tags :
Next Story