கொரோனாவால் மூடப்பட்ட சஞ்சய் காந்தி தேசிய பூங்கா திறப்பு


கொரோனாவால் மூடப்பட்ட சஞ்சய் காந்தி தேசிய பூங்கா திறப்பு
x
தினத்தந்தி 16 Dec 2020 5:28 AM IST (Updated: 16 Dec 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவலினால் 9 மாதமாக மூடப்பட்ட சஞ்சய் காந்தி தேசிய பூங்கா திறக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. இதில் மும்பை போரிவிலியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் ஒன்றாகும்.

இந்தநிலையில் சுமார் 9 மாதமாக மூடப்பட்டு இருந்த தேசிய பூங்கா நேற்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. இது தொடர்பாக சுற்றுலாவாசிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி மெயின் நுழைவு வாயிலில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

காலை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பூங்கா திறந்து இருக்கும். உடல் நலம் பாதித்தோர் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. முக கவசம் கட்டாயம். மேலும் மராட்டிய அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

தேசிய பூங்காவில் மையப்பகுதியான கன்னேரி குகைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தும்பிபாடா அருகே உள்ள நுழைவு வாயில் வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Next Story