திருமணத்துக்கு கூடுதல் வரதட்சணை கேட்ட வாலிபர் குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு


திருமணத்துக்கு கூடுதல் வரதட்சணை கேட்ட வாலிபர் குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 Dec 2020 3:30 AM IST (Updated: 16 Dec 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் திருமணத்துக்கு கூடுதல் வரதட்சணை கேட்டதாக வாலிபர் குடும்பத்தினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

வேலூர் மாவட்டம் தோத்திபட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மகள் நஷீதா (வயது 27). இவரும், நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த ராஜேந்திரபிரசாத் என்பவருடைய மகன் விஜய் என்பவரும், இணையதளம் மூலம் நண்பர்கள் ஆனார்கள். பின்னர் செல்போன் மூலம் தொடர்ந்து பேசியதன் மூலம் 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து 2 பேருடைய குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி விஜய், நஷீதா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திருமணம் தள்ளிப்போனது.

இந்த நிலையில் விஜய் குடும்பத்தினர், நஷீதா குடும்பத்தினரிடம் திருமணத்துக்கு கூடுதலாக நகை, பணம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நஷீதா புகார் அளித்தார். அதன்பேரில் விஜய், அவருடைய தந்தை ராஜேந்திர பிரசாத், தாய் ஜீவா, சகோதரிகள் ஜோதி மற்றும் குமுதா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story