ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கிராம மக்கள் குளத்தில் குடியிருக்கும் போராட்டம்


ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கிராம மக்கள் குளத்தில் குடியிருக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2020 3:45 AM IST (Updated: 16 Dec 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராமமக்கள் குளத்தில் குடியிருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா அகிலாண்டபுரம் பஞ்சாயத்தில் சத்திரப்பட்டி கிராமத்தில் ஊர் உடையான் குளம் உள்ளது. அதன் அருகில் மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக அந்த கிராமத்து மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். நேற்று காணொலி காட்சி மூலம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில், அந்த இடங்களை தனிநபர்கள் முள் செடிகளை பிடுங்கி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று குளத்திற்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பந்தல் அமைத்து உணவுகளை சமைத்து சாப்பிட்டு தங்கினர். தனியார் ஆக்கிரமித்த இடங்களையும,் மேய்ச்சல் நிலங்களையும் நீர்ப்பரப்பு இடங்களையும் அளவீடு ெசய்து பஞ்சாயத்திடம் ஒப்படைக்கக் கோரி, அந்த கிராம மக்கள் அங்கு குடியிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர.் இதனை அறிந்த கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பானுமதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் 1993-ம் ஆண்டு தங்களது பத்திரத்தில் உள்ளவாறு நில அளவை செய்து, தங்களுக்கு அளந்து கொடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் குடியிருக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று கிராமமக்கள் கூறியுள்ளனர்.

Next Story