புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கரூரில் 2-வது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கரூரில் 2-வது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்றுமுன்தினம் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் 10 பெண்கள் உள்பட 34 பேர் கைது செ ய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
48 பேர் கைது
இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விவசாய விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தகம் ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் ஒப்பந்தம் சட்டம் மற்றும் மின்சார திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று கண்டன உரை எழுப்பினர்.
இதில் பல்வேறு விவசாய சங்கங்கள், கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story