திருச்சியில் அதிகாலையில் பரபரப்பு தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசம்
திருச்சியில் அதிகாலையில் பரபரப்பு தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசம்.
திருச்சி,
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் சுவிட்ச் போர்டு தயாரிக்கும் மரக்கடைகள் உள்ளன. இங்கு மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்க்யூ ராஜா தலைமையில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனாலும் அருகிலிருந்த கார்த்திக் மற்றும் முருகேசன் என்பவர்களுக்கு சொந்தமான கடைகளிலும் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தி, மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மூன்று கடைகளிலும் இருந்த ஏராளமான சுவிட்ச் போர்டுகள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தும் மர பலகைகள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.
இதுபற்றி பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story