அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகளுக்கு பாக்கி தொகை வழங்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு பாக்கி தொகையை வழங்க வலியுறுத்தி அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 21-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பொன்முடி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 714 விவசாயிகளுக்கு வியாபாரிகள் வழங்க வேண்டிய ரூ.80 லட்சத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், இந்த தவறுக்கு துணை போன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.புகழேந்தி, துணை செயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரேமா அல்போன்ஸ், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர்பொன்முடி எம்.எல்.ஏ. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.
கோரிக்கை மனு
தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த மாவட்ட விற்பனை கூட செயலாளர் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்தமனுவை பெற்றுக்கொண்ட அவர் வருகிற 20-ந் தேதிக்குள் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என கூறினார். இதற்கு குறிப்பிட்ட நாளைக்குள் பணம் பட்டுவாடா செய்யாவிட்டால் வருகிற 21-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பொன்முடி எம்.எல்.ஏ. கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் தொழிலதிபர் எம்.எஸ்.கே.அக்பர், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளரும் அரகண்டநல்லூர் பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான வக்கீல் ராயல் அன்பு, திருக்கோவிலூர் நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், திருக்கோவிலூர் பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் குணா என்கிற குணசேகரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமா மூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் வக்கீல் கார்த்திகேயன், அய்யப்பன், முகையூர் ஒன்றிய துணைச் செயலாளர் முருகையன், எஸ்.டி.பிரிவு மாவட்ட நிர்வாகி ராஜீவ் காந்தி, மணம்பூண்டி நிர்வாகி கார்த்திகேயன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாரதிதாசன், மாணவரணி அமைப்பாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரபு வரவேற்றார். முடிவில் அரகண்டநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story