மழையால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி ஆர்ப்பாட்டம்


மழையால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2020 10:02 AM IST (Updated: 16 Dec 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி திருத்துறைப்பூண்டியி்ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி,

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் குடிசை மற்றும் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த வீடுகளுக்கு பதில் ஏழை மக்களுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய கான்கிரீட் வீடுகளை கட்டித் தர வலியுறுத்தியும், கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ. 15,000 வழங்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருத்துறைப்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வேதை சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்்

மனு அளித்தனர்

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி் விளக்கி பேசினார்.

மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் துணை தாசில்தாரிடம் மனு அளித்தனர். 

Next Story