உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே, 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை


ஆண்டிப்பட்டி கணவாய் மலை பகுதியில் சோதனை ரெயில் சென்ற காட்சி
x
ஆண்டிப்பட்டி கணவாய் மலை பகுதியில் சோதனை ரெயில் சென்ற காட்சி
தினத்தந்தி 17 Dec 2020 4:43 AM IST (Updated: 17 Dec 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அகல ரெயில் பாதை
மதுரையில் இருந்து போடி வரை மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 2009-ம் ஆண்டு வரை ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் பாதையை அகல பாதையாக மாற்ற திட்டமிட்டு ெரயில்வே நிர்வாகம் பணிகளை மேற்கொண்டது.

அதன்பிறகு முதல் கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கிலோ மீட்டர் தூரம் அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான ரெயில் பாதை பணிகள் நடைபெற்றன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையில் முதல் சோதனை ரெயில் ஓட்டம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான 2-ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக ெரயில்வே நிர்வாகம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டு நேற்று காலை 8 ெரயில் பெட்டிகளுடன் ெரயில் உசிலம்பட்டியில் இருந்து இயக்கப்பட்டது.

17 நிமிடங்கள்
இந்த ரெயிலில் ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் சிங், தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரபாபு, தலைமை பொறியாளர் இளம்பூரணன், உதவி தலைமை பொறியாளர் சூரியமூர்த்தி மற்றும் ெரயில்வே துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஆண்டிப்பட்டியில் இருந்து டிராலி மூலம் ெரயில்வே அதிகாரிகள் வந்து தண்டவாளத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

உசிலம்பட்டியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிபட்டிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ெரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த 21 கிலோ மீட்டர் தூரத்தை சோதனை ரெயில் 17 நிமிடங்களில் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story