100 தொழில் முனைவோருக்கு மனை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


100 தொழில் முனைவோருக்கு மனை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2020 6:45 AM IST (Updated: 17 Dec 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டம் புஞ்சை காளக்குறிச்சி ஜவுளி பூங்காவில் 100 தொழில் முனைவோருக்கு மனை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கரூர், 

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூருக்கு வந்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க.தொண்டர்கள் வழிநெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, ரூ.627 கோடி மதிப்பீட்டில் 2, 089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்தார். ரூ.118 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 28 முடிவுற்ற திட்டப்பணிகளைத் துவக்கி வைத்தார்.11, 760 பயனாளிகளுக்கு ரூ. 35 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதன் பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உயர்மட்ட பாலம் கட்டும் பணி

ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்புக் கட்டிடம் கட்டும் பணி ரூ. 2.22 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றது.நெடுஞ்சாலைத் துறையில், தேசிய நெடுஞ்சாலை எண்.7 சுக்காலியூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 தண்ணீர் பந்தல் சாலையை கரூரில் இணைக்கும் சாலை மேம்பாடு செய்தல் மற்றும் அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டுதல் பணிக்கு ரூ.10 இலட்ச மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்திடவும், நிலம் எடுக்கும் பணிக்காக ரூ.23.45 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நிலத்திட்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம், உன்னியூருக்கும், கரூர் மாவட்டம், நெரூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி, நாகப்பட்டினம், கூடலூர், மைசூர் சாலை கி.மீ. 218/6ல் கோவை சாலை, முனியப்பன் கோவில் அருகில் ரூ. 30.52 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்த அழைப்பு முடிவு பெற்று, ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் உள்ளது.

ரூ.486.61 கோடியில் திட்ட மதிப்பீடு

கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 50 ஊராட்சிகளில் உள்ள 756 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ. 486.61 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஜல் ஜீவன் மி‌‌ஷன் திட்டத்தின் கீழ் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திட்டம், கரூர் மாவட்டத்தில் உள்ள கிரு‌‌ஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 46 ஊராட்சிகளில் உள்ள 529 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்புக்கான ஆய்வுப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் ஆய்வில் இருக்கின்றன, இத்திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, புஞ்சைக்காளக்குறிச்சி கிராமத்தில் 2018-19-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இங்கு 100 தொழில்மனைகள் உருவாக்கப்பட்டு, தேவைப்படும் ஜவுளி உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டுமென்பதற்காக, அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதியதாக தொடங்கப்பட்டு அதில் 282 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கரூருக்கு நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நடந்த வரவேற்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் விவரம் பின்வருமாறு:-

கரூர் மாவட்ட திட்ட அதிகாரி கவிதா, கரூர் நகராட்சி ஆணையர் சுதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கண்ணதாசன், ஆவின் தலைவர் எம்.எஸ்.மணி, கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் தானே‌‌ஷ் என்கிற முத்துக்குமார், கடவூர் ஒன்றிய தலைவர் செல்வராஜ், கிரு‌‌ஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன், கரூர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் என்.எஸ். கிரு‌‌ஷ்ணன், வேலாயுதம்பாளையம் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம், கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, தி கரூர் வீவிங்-நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேசன் தலைவர் தனபதி, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, க.பரமத்தி கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் தில் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வள்ளியாத்தாள், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி, கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் கவிதா கோவிந்தராஜ். குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயன், தோகைமலை ஒன்றிய குழு தலைவர் லதா ரெங்கசாமி, துணைத்தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், தோகைமலை ஒன்றிய துணை செயலாளர் துரைக்கவுண்டர், கிரு‌‌ஷ்ணராயபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. அறிவழகன், தோகைமலை முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் சின்னவழியான், தோகைமலை ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் ஆசைக்கண்ணு, கல்லடை ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி ஆசைக்கண்ணு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மருதூர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், புஞ்சைபுகளூர் பேரூர் கழக செயலாளர் விவேகானந்தன், காகிதபுரம் பேரூர் செயலாளர் சதாசிவம், தாந்தோனி ஒன்றிய ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வி.சி.கே.பாலகிரு‌‌ஷ்ணன், துணைத்தலைவர் லதாமுருகேசன், தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் இணைத்தலைவர் வக்கீல் மாரப்பன், மூக்காணாங்குறிச்சி ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ், பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா ராமச்சந்திரன், கழுகூர் ஒன்றிய கவுன்சிலர் பி.முருகேசன், நாகனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேலுசாமி, கீழவெளியூர் கூட்டுறவு சங்க இயக்குனர் வேலுசாமி, கவிதா ஸ்வீட் ஸ்டால் வெங்கடேசன், உப்பிடமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பழனிசாமி, கரூர் வட்ட கூட்டுறவு வசதி சங்க தலைவர் பழனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story