தவறு இழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சிறைக்கு அனுப்பும் அதிகாரம் உண்டு


தவறு இழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சிறைக்கு அனுப்பும் அதிகாரம் உண்டு
x
தினத்தந்தி 17 Dec 2020 7:13 AM IST (Updated: 17 Dec 2020 7:13 AM IST)
t-max-icont-min-icon

தவறு இழைத்திருப்பது கண்டறியப்பட்டால் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சிறைக்கு அனுப்பும் அதிகாரம் உண்டு என்று துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசினார்.

திருச்சி, 

தமிழக சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பேரவைக்குழு செயலாளர் சீனிவாசன், திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, பொது கணக்கு குழு உறுப்பினர்கள் உதயசூரியன், ஆர்.நடராஜ், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

திருப்தி செய்ய வேண்டும்

அரசின் கணக்கு வழக்குகளை சரிபார்க்கிற கமிட்டி இது.ஒவ்வொரு மானியத்திற்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா? அல்லது முறைகேடு நடந்துள்ளதா? அல்லது நடக்காமலேயே இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்கிற வேலை எங்களுடையது. எந்த கமிட்டிக்கும் இல்லாத ஒரு அதிகாரம் பொது கணக்கு குழுவிற்கு உண்டு. இக்குழுவானது யாரையும் இந்த கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்புகிற அதிகாரம் உண்டு. சம்மன் அனுப்பப்பட்ட அதிகாரி, இக்குழு முன்பு ஆஜராகி, குழு கேட்கிற கேள்விகளுக்கு பதில் அளித்து திருப்தி செய்ய வேண்டும்.

பணி நீக்கம் அதிகாரம்

பொது கணக்கு குழுவினர், கணக்கு வழக்குகளில் தவறு கண்டால், அதிகாரிகள் யாரையும் எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யும் அதிகாரம் உண்டு. இக்குழு நினைத்தால் அதிகாரியின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக நினைத்தால், அவரது பதவி உயர்வை ரத்து செய்யலாம். அல்லது பதவி நீக்கம் செய்யலாம். இன்னும் கொஞ்சம் மோசமான தவறு இழைத்திருந்தால், சிறைச்சாலைக்கு அனுப்புகிற அதிகாரமும் உண்டு. எனவே, பொதுக்குழு செயலாளர் கேட்கிற கேள்விகளு க்கு சரியாக பதில் அளியுங்கள். தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லுங்கள். அதே வேளையில் மழுப்பலான பதில் சொன்னால், மாட்டிக்கொள்வீர்கள். எனவே, எல்லோருக்கும் அனைத்து புள்ளி விவரமும் தெரியாதுதான். யாரையும் துன்புறுத்த வேண்டும் என்றோ, வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்றோ இங்கு வரவில்லை. எங்களுக்கு தேவை, கொ டுக்கப்பட்டு கணக்கு வழக்குகள், நிர்வாகங்கள் பற்றி கேள்விகள் கேட்போம். அதற்கு சரியான பதில் சொல்லியாக வேண்டும். யாரையும் நாங்கள் தண்டிக்க வேண்டும் என்பதில்லை.

16 ஆண்டுகள் அமைச்சர்

எனது அரசியல் வாழ்வில், பொதுப்பணித்துறை, நெ டுஞ்சாலைத்துறை, மின்சாரம் உள்ளிட்ட 11 இலாகாக்களை நான் வகித்தவன். கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் பொதுப்பணித்துறை அமைச்சராக இரு ந்துள்ளேன். யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை.எனவே, இங்குள்ள அதிகாரிகள், பொது கணக்கு குழுவிற்கு ஒத்துழைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. அரசு அதிகாரிகளை தவிர, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து துறைவாரியாக செலவழித்த தொகை, திட்டப்பணிகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து பொது க்கணக்கு குழுவினர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சத்திரம் பஸ் நிலையம் ஆய்வு

அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் முடிந்ததும், துரைமுருகன் தலைமையிலான குழுவினர் திருச்சி சத்திரம் டவுன் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறைச்சாலை, திருச்சி வேளாண்மைக்கல்லூரி ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story