ராமேசுவரம் அருகே அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தற்கொலை; கந்துவட்டிக்காரர்கள் அழைத்துச் சென்று அவமானப்படுத்தினார்களா?
ராமேசுவரம் அருகே அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டிக்காரர்கள் அழைத்துச் சென்று அவமானப்படுத்தியால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
உதவி தலைமை ஆசிரியர்
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பூமாரியப்பன் (வயது 53). இவர் பாம்பன் அக்காள்மடத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி (52) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வீட்டிற்கு வந்து பூமாரியப்பனை தரக்குறைவாக பேசியதாகவும் அவரை அழைத்துச்சென்று அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஒரு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விசாரணை
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story