காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2020 8:29 AM IST (Updated: 17 Dec 2020 8:29 AM IST)
t-max-icont-min-icon

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் அறிவித்தபடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்்களுக்கு ரூ.1400, தூய்மை காவலர்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும். 2000-ம் ஆண்டுக்கு பின் பணிநியமனம் செய்யப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்க வேண்டும்.

3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தூய்மை காவலர் சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் லோகநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story