வத்திராயிருப்பு மலைப்பகுதிகளில் மழை: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வத்திராயிருப்பு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆறு மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் பலத்த மழையாலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கான்சாபுரம் அருகே உள்ள ஆத்திகோவில் ஆறு, பாப்பனத்த பெருமாள் கோவில் ஆறு, தாணிப்பாறை வழுக்கல்பாறைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், தைலாபுரம் மற்றும் மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வனப்பகுதிக்குள் உள்ள ஆறுகளுக்கு சென்று குளித்துவிட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆதலால் இங்கு ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள ஆறுகளில் பல்வேறு வகையான மூலிகைகள் கலந்து மூலிகை தண்ணீராக வருகிறது. ஆதலால் நாங்கள் இங்கு மகிழ்ச்சியுடன் குளித்து செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story