இலவசமாக புற்றுநோய் கண்டறிய ரூ.3½ கோடியில் அதிநவீன மருத்துவ கருவிகளுடன் புதிய வாகனம்
இலவசமாக புற்றுநோய் கண்டறிய ரூ.3½ கோடியில் அதிநவீன மருத்துவ கருவிகளுடன் புதிய வாகனம் ரோட்டரி சங்கங்கள் சார்பில் வாங்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய திருப்பூர் ரோட்டரி சங்கங்களின் சார்பில் புதிய வாகனம் வாங்கப் பட்டுள்ளது. இதன் அறிமுக விழா திருப்பூர் ரோட்டரி சங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவை ரோட்டரி முன்னாள் ஆளுநர் அருள்ஜோதி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். ஏழைப்பெண்களுக்கு புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய ஈரோடு மற்றும் திருப்பூர் ரோட்டரி சங்கங்கள் மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம், சர்வதேச ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி மெக்ஸிகோ ஆகிய அனைத்து சங்கங்களும் இணைந்து ரூ.3½ கோடியில் இந்த கருவிகள் அடங்கிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது. விழாவிற்கு தெற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
வாகனத்தை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாடுகளை டாக்டர் விஜயகிரி, செயல் தலைவர் சுரேஷ் ஆனந்தகிருஷ்ணன் விளக்கி கூறினர். இத்திட்டத்தின் முகாம்கள் வருகிற ஜனவரி மாதம் தொடங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 250 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம் 10 ஆயிரம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும்,20 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டம் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் ஆதரவுடன் செயல்பட உள்ளது.விழாவை திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.ஜி.ஆனந்த்ராம் தொகுத்து வழங்கினார்.
Related Tags :
Next Story