மராட்டிய மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன


மராட்டிய மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 17 Dec 2020 4:33 PM IST (Updated: 17 Dec 2020 4:33 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இருந்து நேற்று 3 லாரிகளில் நாமக்கல்லுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

நாமக்கல், 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து 3 லாரிகள் மூலம் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் இவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டன. இந்த பணியை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் தேர்தலின் போது பயன்படுத்த முதல் கட்டமாக 1,700 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 250 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் யாருக்கு ஓட்டுப்பதிவு செய்தார் என்பதற்கான ஒப்புகைசீட்டு வழங்கும் எந்திரமான 1,700 வி.வி.பேட் எந்திரங்களும் வந்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது உதவி கலெக்டர் கோட்டைகுமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணி, நாமக்கல் தாசில்தார் கதிர்வேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story