மாவட்டத்தில் ஆசிரியர் உள்பட 34 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 10,875 ஆக உயர்வு


மாவட்டத்தில் ஆசிரியர் உள்பட 34 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 10,875 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 Dec 2020 4:51 PM IST (Updated: 17 Dec 2020 4:51 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 875 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சைபெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 841 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் பொத்தனூர் அரசுப் பள்ளி ஆசிரியர், கோனூர் ஊராட்சி தூய்மைப் பணியாளர் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 875 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 8 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 572 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 106 பேர் பலியான நிலையில் 197 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story