பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல், மழையை தொடர்ந்து வளிமண்டல சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினமும், நேற்றும் பெய்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல், மழையை தொடர்ந்து வளிமண்டல சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினமும், நேற்றும் பெய்தது. இதனால் கடந்த 2 நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் இதமான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு தொடங்கி இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய மழை நீடித்தது. இதனால் பெரம்பலூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;-
செட்டிகுளம்-28, பாடாலூர்-21, அகரம் சிகூர்-56, லெப்பைக்குடிகாடு-60, புதுவேட்டக்குடி-48, பெரம்பலூர்-62, எறையூர்-36, கிருஷ்ணாபுரம்-42, தழுதாழை-42, வி.களத்தூர்-30, வேப்பந்தந்தட்டை-46.
தற்போது பெய்து வரும் மழை பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர். நன்செய், மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடிக்கு துணையாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story