நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.127 கோடியில் 217 சாலைப்பணிகள்; சிவகங்கை மாவட்ட கலெக்டர் தகவல்


இடையமேலூர் முதல் தமறாக்கி வரை நடைபெறும் சாலைஅகலப்படுத்தும் பணியை கலெக்டர் மதுசூதன் ரெட்டிபார்வையிட்ட போது
x
இடையமேலூர் முதல் தமறாக்கி வரை நடைபெறும் சாலைஅகலப்படுத்தும் பணியை கலெக்டர் மதுசூதன் ரெட்டிபார்வையிட்ட போது
தினத்தந்தி 18 Dec 2020 7:52 AM IST (Updated: 18 Dec 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடப்பாண்டிற்கு ரூ.127 கோடி மதிப்பீட்டில் 217 சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

217 சாலைப்பணிகள்
சிவகங்கை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடப்பாண்டில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் 217 சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் 68.14 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியும், 87.64 கிலோ மீட்டர்நீளத்திற்கு சாலை மேம்படுத்தும் பணியும் நடக்கிறது. பணிகள் நடக்கும் பொழுது செயற்பொறியாளர் அவ்வப்போது ஆய்வு செய்வதுடன் சாலையின் இருபக்கங்களிலும் பலப்படுத்தும் பணி சரியாக நடைபெறுகிறதா? என உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மழைகாலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வண்ணம் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் பகுதிகளில் தேவைக்கேற்ப கான்கிரீட் சுவர் அமைக்கலாம். அப்போது சாலையின் பயன்பாடு நீண்டகாலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி மண்அரிப்பு முற்றிலும் தடுக்கப்படும். பொதுவாக, பணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு அனுமதி பெறப்பட்டு மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்களின் நலன்கருதி அவ்வப்போது பயன்பாட்டிற்கு ஏற்ப சாலைகளின் பக்கவாட்டுகளை விரிவுபடுத்தி மேற்கொள்ள வேண்டும். இ்வ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு
முன்னதாக கலெக்டர் இடையமேலூர் முதல் தமறாக்கி வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியையும், திருமாஞ்சோலை முதல் கட்டயம்பட்டி வரை சுமார் 6.4 கிலோ மீட்டர் நீளத்திற்குரூ.8 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணியையும் நேரில் பார்வையிட்டார். சாலை தரமாக போடப்படுகிறதா? என ஆய்வு செய்தார். கலெக்டருடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

Next Story