ேவதாரண்யத்தில் தொடா் மழை: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது
ேவதாரண்யத்தில் ெதாடா் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது. ேமலும 10 ஆயிரம் மீனவா்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு ெசல்லவில்ைல.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், செட்டிபுலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் முன்தினம் விட்டு விட்டுமழை பெய்தது. நேற்றும் 2-வது நாளாக ேவதாரண்யம் பகுதியில் மழை ெபய்தது.
நிவா், புெரவி புயல்களால் ெபய்த ெதாடா்மழையால் வயல்களில் ேதங்கி நின்ற தண்ணீா் தற்ேபாது தான் வடிந்து வந்தது. தற்ேபாது 2 நாட்கள் ெபய்த மழையால் வயல்களில் மீண்டும் தண்ணீா் ேதங்கி உள்ளதால் பயிா்கள் அழுகும் நிைல ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மீன்பிடிக்க ெசல்லவில்லை
மழையின் காரணமாக வேதாரண்யத்தில் உள்ள 10 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.தொடர்ந்து 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள 17-வது வார்டு காந்தி நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி மாணவ விடுதி, குடியிருப்பு பகுதியில் தண்ணீா்் சூழ்ந்துள்ளது. உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மந்தி தோப்பிற்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரிலேயே நடந்து செல்கின்றனா்.
இதுகுறித்து அந்த பகுதி ெபாதுமக்கள் கூறியதாவது:-
வடிகால்கள் ஆக்கிரமிப்பு
ஒவ்வொரு மழை காலத்திலும் மழைநீா் ேதங்கி கிடக்கிறது. இதனால் அன்றாட தேவைகளுக்கு 2 அடி முதல் 3 அடி தண்ணீாில் இறங்கி ெசல்கின்றனா். இப்பகுதியில் வடிகால்கள் ஆக்கிரமிப்பு மற்றும் முறையான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது, தற்போது சாலையிலும், வீடுகளை சுற்றியும் தேங்கியுள்ள மழை நீர் வடிய குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும். எனவே மழைநீா் வடிவதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு அவா்கள் கூறினா்.
நாகை
நாகையில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. நேற்று காலையும் மழை பெய்தது. இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக சிவசக்தி நகர், சவேரியார் கோவில் தெரு, என்.ஜி.ஓ. காலனி குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இேத ேபால் கீழ்வேளூர், தேவூர், ஆந்தகுடி, நீீலப்பாடி, கூத்தூர், வெண்மணி, காக்கழனி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், வெண்மணி, சிக்கல், ஆழியூர், உள்ளிட்ட பகுதிகளில் ேநற்று மழை பெய்தது.
மழை அளவு
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மணல்மேடு 47, திருப்பூண்டி 46, சீர்காழி 45, வேதாரண்யம் 42, கொள்ளிடம் 41, தரங்கம்பாடி 38, தலைஞாயிறு 25, நாகப்பட்டினம் 16, மயிலாடுதுறை 14 என பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story