ஈரோடு சந்தையில் மானிய விலையில் மாடுகளை வாங்க வந்த பெண்கள்
ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. நேற்று கூடிய சந்தைக்கு ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 500 பசு மாடுகள், 250 எருமை மாடுகள், 100 கன்றுக்குட்டிகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.
இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தார்கள். இதில் பசு மாடு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டிகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரையும் விலைபோனது. அரசின் மானிய விலையில் கறவை மாடுகள் வாங்கும் திட்டத்துக்காக தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பலர் வந்திருந்தார்கள். அவர்கள் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள், வியாபாரிகளின் உதவியுடன் மாடுகளை தேர்வு செய்து வாங்கினார்கள். இதனால் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.
Related Tags :
Next Story