ஒகேனக்கல்லில் பரபரப்பு: பரிசலில் தனியாக சென்ற பெண் பாலியல் பலாத்காரம் - பரிசல் ஓட்டி கைது
ஒகேனக்கல்லில் பரிசலில் தனியாக சென்ற பெண்ணை, பரிசல் ஓட்டியே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஜாகிரி பகுதியை சேர்ந்த 40 வயது பெண் கடந்த 15-ந் தேதி இரவு பஸ் மூலம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மாறுக்கொட்டாய் பகுதிக்கு தனியாக வந்தார்.
பின்னர் அங்கிருந்து ஒகேனக்கல்லில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதற்காக பரிசல் மூலம் ஆற்றை கடந்துள்ளார். அப்போது மணல் திட்டு பகுதியில் பரிசலை விட்டு இறங்கும்போது, அவரை பரிசல் ஓட்டி மூர்த்தி (வயது 45) என்பவர் வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண் நேற்று முன்தினம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பரிசல் ஓட்டி மூர்த்தி மீது ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஒகேனக்கல்லில் பரிசலில் தனியாக சென்ற பெண்ணை, பரிசல் ஓட்டியே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story