மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39,120 பேர் விண்ணப்பம் - தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39,120 பேர் விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 14 லட்சத்து 25 ஆயிரத்து 883 வாக்காளர்கள் இருந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 15-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற்றது.
இந்த பணியின்போது 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தனர். இதேபோல் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கும் மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39,120 பேரும், நீக்கம் செய்ய 25,291 பேரும், திருத்தம் செய்ய 10,043 பேரும், இடமாற்றம் செய்ய 5,357 பேரும் என மொத்தம் 79 ஆயிரத்து 811 பேர் விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்தும், அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story