மாவட்டத்தில், கொரோனா பாதித்த 85 பேர் குணமடைந்தனர்


மாவட்டத்தில், கொரோனா பாதித்த 85 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 18 Dec 2020 8:20 PM IST (Updated: 18 Dec 2020 8:20 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 85 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 49 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 31 பேர், தாரமங்கலத்தில் 5 பேர், மகுடஞ்சாவடியில் 3 பேர், நங்கவள்ளி, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், கொளத்தூர், எடப்பாடி, கொங்கணாபுரம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனிடையே சேலத்தை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார்.

Next Story