சத்தாராவில் சகோதரிகள் 3 பேர் திடீர் சாவு உணவு விஷத்தன்மையானதா?


சத்தாராவில் சகோதரிகள் 3 பேர் திடீர் சாவு உணவு விஷத்தன்மையானதா?
x
தினத்தந்தி 19 Dec 2020 3:54 AM IST (Updated: 19 Dec 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

சத்தாராவில் 3 சகோதரிகள் திடீரென உயிரிழந்தனர். உணவு விஷத்தன்மை அடைந்தது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தாரா, 

சத்தாரா மாவட்டம் காரத் தாலுகாவில் உள்ள சாய்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியும், அவர்களின் 3 வயதில் இருந்து 9 வயதுக்குட்பட்ட மூன்று மகள்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவாக கத்தரிக்காய் குழம்பும், கடையில் இருந்து வாங்கிவந்த பாசுந்தி என்ற இனிப்பையும் உட்கொண்டுள்ளனர்.

பின்னர் தூங்க சென்ற அவர்கள் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாந்தி எடுத்துள்ளனர். இதனால் அடுத்த நாள் காலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர்.

இதையடுத்து அடுத்தநாள் காலை அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாள். இதையடுத்து அடுத்தத்தடுத்த நாட்களில் மற்ற 2 சகோதரிகளும் உயிரிழந்தனர்.

இவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உட்கொண்ட பாசுந்தி என்ற இனிப்பு விஷத்தன்மை அடைந்து சிறுமிகளின் உயிரை பறித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story