திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்; 24-ந் தேதி நடக்கிறது
மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் துறைசார்ந்த முதன்மை அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், வட்டார அளவில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோரும் காணொலி மூலமும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டு, கலெக்டரிடம் விவசாயம் தொடர்பாக தேவையான கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.
மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்து கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story