திருக்கழுக்குன்றம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


திருக்கழுக்குன்றம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 Dec 2020 5:52 AM IST (Updated: 19 Dec 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி.

இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 7 பவுன் நகை, 2 கொலுசு, மற்றும் எல்.இ.டி. டி.வி. மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர் திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story