கோவில்பட்டி அருகே குருமலை கிராமத்தில் 'மினி கிளினிக்'; அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர்ராஜூ திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்துபெட்டகத்தை வழங்கியபோது
x
மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர்ராஜூ திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்துபெட்டகத்தை வழங்கியபோது
தினத்தந்தி 20 Dec 2020 7:49 AM IST (Updated: 20 Dec 2020 7:49 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே குருமலை கிராமத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

மினி கிளினிக்
கோவில்பட்டி அருகே குருமலை ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, மினி கிளினிக்கை திறந்து வைத்தார். மேலும், 2 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், "தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதில், முதற்கட்டமாக 630 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு 9 மினி கிளினிக்், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு 9 மினி கிளினிக் என மொத்தம் 18 மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளன.

இந்த மினி கிளினிக்குகள் பிற்காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும்" என்றார்.

காப்பகத்தில் ஆய்வு
தொடர்ந்து, கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்துக்கு அமைச்சர், மாவட்ட கலெக்டர் சென்றனர். அவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு, மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா, கயத்தாறு தாசில்தாா் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் அருண்விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, பிரமுகர்கள் குருராஜ், வண்டானம் கருப்பசாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story