தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையில் வடகிழக்கு பருவமழை 568 மி.மீ. பதிவானது


தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையில் வடகிழக்கு பருவமழை 568 மி.மீ. பதிவானது
x
தினத்தந்தி 20 Dec 2020 8:29 AM IST (Updated: 20 Dec 2020 8:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையில் வடகிழக்கு பருவமழை 568 மி.மீ. பதிவானது. அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 2-வது நாளாக 55 மி.மீ. பெய்தது.

தஞ்சாவூர், 

தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கி பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பலத்த மழை பெய்தது.

அதன் பின்னர் தொடர்ந்து சில நாட்கள் மழை இன்றி காணப்பட்ட நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்தது. இரவு, பகல் என விட்டு, விட்டு பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அதிகபட்ச மழை

நேற்றும் அதிகாலை வரை தூறலுடன் மழை பெய்தது. அதன் பின்னர் பகல் பொழுது முழுவதும் மழை பெய்யவில்லை. மழை பெய்யாவிட்டாலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. நேற்று மழை பெய்யாததால் மேடான பகுதிகளில் உள்ள வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியத்தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் நேற்று முன்தினம் 55 மி.மீ. மழை பதிவானது. நேற்றும் 2-வது நாளாக 55 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

568 மி.மீ. பதிவு

தஞ்சை மாவட்டத்தில் இரண்டு பருவ மழைகளையும் சேர்த்து ஆண்டுக்கு சராசரியாக 1098 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 969.60 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் 637.02 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரையில் 568 மி.மீ. மழையே பெய்து உள்ளது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:-

அய்யம்பேட்டை-55, மதுக்கூர்-31, கல்லணை-27, பட்டுக்கோட்டை-24, மஞ்சளாறு, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர்-19, தஞ்சை,, நெய்வாசல் தென்பாதி-18, ஈச்சன்விடுதி, பேராவூரணி-17, அணைக்கரை, பாபநாசம்-16, அதிராம்பட்டினம்-15, வல்லம்-14, குருங்குளம்-13, திருவையாறு-12, ஒரத்தநாடு-6, வெட்டிக்காடு-4.

Next Story