இன்று முதல் யஷ்வந்த்பூர்-கண்ணூர் சிறப்பு ரெயில் நேரம் மாற்றம்
கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
திருப்பூர்,
கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இதில் ஈரோடு ரெயில் நிலையம் முதல் கண்ணூர் ரெயில் நிலையம் வரை ரெயில் வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு புறப்படும் ரெயில இரவு 12.32 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்தை அடையும். அதன்பிறகு ஈரோடு ரெயில் நிலையத்தை 1.35 மணிக்கும், திருப்பூர் ரெயில் நிலையத்தை 2.25 மணிக்கும், கோவை ரெயில் நிலையத்தை 3.27 மணிக்கும், பாலக்காடு ரெயில் நிலையத்தை 4.50 மணிக்கும் வந்து சேரும். இறுதியாக கண்ணூர் ரெயில் நிலையத்தை காலை 9.45 மணிக்கு சேரும்.
முந்தைய அட்டவணைப்படி கண்ணூர் ரெயில் நிலையத்தை 10.30 மணிக்கு ரெயில் சென்று சேரும். ஆனால் மாற்றியமைக்கப்பட்ட இது கால அட்டவணைப்படி காலை 9.45 மணிக்கு ரெயில் சென்று சேருகிறது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story