வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருவோர கடை வியாபாரிகள் அனைவருக்கும் கடன் உதவி வழங்க நடவடிக்கை; ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் தகவல்
வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருவோரக் கடை வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கரன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருவோர கடை வியாபாரிகளுக்கு கொரோனா கால நிவாரண வங்கி கடன் உதவி வழங்குவது, வியாபாரிகளின் விவரம் சேகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. உதவி கமிஷனர்கள் மதிவாணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5,325 தெருவோர கடை வியாபாரிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டது. அதனால் தெருவோர கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2,125 வியாபாரிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களில் 1,320 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து வியாபாரிகளுக்கும் கடனுதவி
மீதமுள்ள தெருவோர கடை வியாபாரிகளின் விவரங்களையும் மாநகராட்சி ஊழியர்கள் சேகரிக்க வேண்டும். பின்னர் அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் அனைத்து தெருவோரக் கடை வியாபாரிகளுக்கும் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரிகள் தங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண், புகைப்படம், வியாபாரம் செய்யும் இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை அந்தந்த பகுதி மண்டல அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story