புஞ்சைபுளியம்பட்டியில் நகர அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ. பங்கேற்பு


புஞ்சைபுளியம்பட்டியில் நகர அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Dec 2020 11:19 AM IST (Updated: 20 Dec 2020 11:19 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் நகர அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் நகர அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் குத்துவிளக்கேற்றினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி.வி.கே.சின்னசாமி, ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. சிதம்பரம், நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் பேரூர் செயலாளர் வாத்தியார் துரைசாமி, நகர நிர்வாகிகள் டி.பாபு, சக்தி சண்முகம், மயில்சாமி, ஜெயசேகரன், பாலன், நாகராஜ், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story