பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை விரைவில் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் 3 மையங்களில் கணினியில் ஏற்பட்ட பழுது காரணமாக 41 பேர் செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தே்ாவில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதன்காரணமாக ஆசிரியர் தேர்வில் ேதர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க,’ உத்தரவிட்டதுடன் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை எனவும் கூறியது.
மனு
இதைத்தொடர்ந்து ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேற்று சந்தித்து தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.
அப்போது அவர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறிவிட்டு ஆசிரியர்கள் அங்கிருந்து சென்றனர்.
பணிநியமன ஆணை
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இதுகுறித்து முதல்- அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரிடம் கலந்து ஆலோசனை நடத்தி கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கூறினார்.
Related Tags :
Next Story