மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டார்


மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 20 Dec 2020 4:13 PM IST (Updated: 20 Dec 2020 4:13 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதை சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் சட்டபை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வரவழைத்து சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,272 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டியம் மாநிலம் லதாரிலிருந்து 5 கன்டெய்னர் லாரிகள் மூலம் கள்ளக்குறிச்சிக்கு நேற்று மாலை எடுத்து வரப்பட்டது. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை தச்சூர் கைகாட்டி அருகே உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது.

இதில் 2,080 கட்டுப்பாட்டு எந்திரம், 2,730 வாக்குப்பதிவு எந்திரம், 2,250 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் என மொத்தம் 7 ஆயிரத்து 60 எந்திரங்கள் இருந்தன. பின்னர் இவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு குடோனில் இறக்கி வைக்கப்பட்டது. இதை கலெக்டர் கிரண்குராலா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், பாலசுப்ரமணியன், தேர்தல் தனி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story