மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,945 ஆக உயர்வு


மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,945 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Dec 2020 7:43 PM IST (Updated: 20 Dec 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு ெகாரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,945 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 10,919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் நாமக்கல் நகராட்சி மேற்பார்வையாளர், மோகனூர் வேளாண்மை உதவி அலுவலர், ஊட்டியில் பணியாற்றி வரும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 24 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 628 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்‌. 106 பேர் பலியான நிலையில் 211 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story