மார்கழி திருவிழா: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கொடியேற்றம் இன்று நடக்கிறது
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது.
சுசீந்திரம்,
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது
இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு சித்திர சபை மண்டபத்தில் பதினெட்டு ஊர்பிடாகைகள், ஊர்தலைவர்கள், அறங்காவலர் குழுவினர், அதிகாரிகளுக்கு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊர்வலம்
மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியர் சமுதாயம் சார்பில் கொடி பட்டத்தை மேள தாளத்துடன் முத்துகுடை ஏந்தி சுசீந்திரம் கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊர் தலைவர், ஆண்கள், பெண்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் சுசீந்திரம் கோவிலை அடைந்ததும், நுழைவாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடி பட்டத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடிப்பட்டம் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலை அடைந்தது. அப்போது குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி கொடி பட்டத்தை பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்றம்
இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜையும், 9 மணிக்கு மேல் தாணுமாலயன் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனியும், சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசையும், பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தேர்பவனி
29-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், 30-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலாவும், இரவு 9 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story