வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடு
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவில் பிரகாரத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சேலம்,
சேலம் அழகிரிநாதர் சுவாமி என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் கோவிலுக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்புகள் அமைக்கும் பணி
இதுதவிர, கூட்ட நெரிசல் இல்லாமல் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில் முன்புறம் மற்றும் கோவில் உள் பிரகாரத்திலும் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் நாள்தோறும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்றும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர் குமரவேல் கூறியதாவது:-
வருகிற 25-ந் தேதி காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதல், நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவு
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும். விழாவில் பக்தர்கள் பங்கேற்க ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும்.
பக்தர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப இலவச தரிசனம் அல்லது ரூ.25 கட்டணம் செலுத்தி விரைவு தரிசனத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட், ஆதார் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச கோளாறு தொடர்பான நோய், இருதய நோய், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். கோவில் நுழைவுவாயில் முன்பு பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தபிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story