ராணிப்பேட்டை முத்துக்கடையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நூதன ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று மாலை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை உயர்த்தியதைக் கண்டித்து, கியாஸ் சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டு, அதற்கு அஞ்சலி செலுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று மாலை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எல்.சி.மணி தலைமை தாங்கினார். நூதன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவர் நிலவு குப்புசாமி, தாலுகா செயலாளர் ரமேஷ், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் துரை, மாதர் சங்க தாலுகா செயலாளர் கீதா, வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story